Monday, 23 March 2009

சங்கர ராம சுப்ரமணியன் கவிதை,ஆங்கில மொழிபெயர்ப்புடன்.


ரயில் கடல்
எனது மகள்
ரயிலைப் புதிதாகப் பார்க்கிறாள்
ரயில் எங்களைக் கடக்கும்போது
அவள் உணரும் திகைப்பை
நானும் பகிர்கிறேன்.
நமது நிறுத்தங்களை எல்லாம்
இணைத்துக் கடக்கும்
சக்கரங்களும் பயணப்பெட்டிகளுமான
ஓர் ஊர்தி மட்டும் அல்ல
ரயில்
அவளும் உணர்கிறாள்.
நகரங்கள்
சிறிய ஊர்கள்
மலைகள் நீர்ப்பொய்கை மனிதர்களூடே
பயணித்தாலும்
நிலவறையிலிருந்தும் எழும்
முதிய அசரீரியா ரயில்
விழாக்களின் போதும்
வாழ்வுவளச் சடங்குகளின் போதும்
மங்கலம் இசைக்கும்
நாதஸ்வரத்துடன்
ரயிலில் முதல் பயணம் தொடங்கியது
மங்கல வாத்திய இசையின்
மீந்தவொலி
ரயிலின் தடதடப்பில்
இன்னும்தான் மிச்சமுள்ளது.
மனிதர்தம் கையாள்தலில்
உடல் சிறுத்து
வேட்டை திரிய
வீடு நோக்கித் திரும்பத் தொடங்கிய
வளர்ப்புப் பிராணிகள்
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்து
தமது மேய்ச்சலைத் தொடரும்
ரயில்
பிறழ இயலாத பெருந்துக்கத்துடன்
விரைந்து செல்லும்
சில முகங்கள் வெல்ல முடியாதவை
முகங்கள் எல்லாம் கடக்கவே இயலாதவை
மரணமும் பேதமும்
இணை பிரியாத தண்டவாளங்கள்
கடலுள் உறைந்திருக்கும்
கடல்களின் பேச்சை
கடல்-ரயில் தன் இருட்டில்
தடதடத்து உரைப்பதை
முழுமையும்
என் மகளிடம் சொல்ல முடியாது.

*

நிலையத்தில்
பயணப்பெட்டிகள் விடுத்து
தனியே செல்லும் என்ஜினைப் பார்த்து
என் மகள்
ரயில் உறங்கப் போகிறதென்கிறாள்
நாங்களும் வீடு திரும்ப வேண்டும்.
--------------------------------

('அச்சமென்றும் மரணமென்றும் இரண்டு நாய்க்குட்டிகள்' என்ற சங்கர ராம சுப்ரமணியனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பிலிருந்து)

வெளியீடு:

குருத்து,
பிச்சாண்டாம் பாளையம்,
பொலவக்காளி பாளையம்-அஞ்சல்,
கோபிச்செட்டிப்பாளையம்.
ஈரோடு மாவட்டம்-638 476.

விலை: ரூ.45.

email: shankarashankara@gmail.com
-------------------------------------------------------
ஆங்கில மொழிபெயர்ப்பு

TRAIN SEA

SHANKARA RAMA SUBRAMANIAN.

My daughter
Sees the train for the
First time.
I too share the
Amazement
She feels
As the train goes past us.
Train is not just a vehicle
With coaches and wheels
That moves on joining all our stations,
She feels too.
Even if it journeys through
Towns
Villages
Mountains
Water-brimming tanks and
People,
Is train an old oracle
From the cellar.
During festivals
And ceremonies meant for
Prosperity in life
First journey by train began
With the auspicious
Playing of Nadhaswaram.
The leftovers of auspicious music
Still remains in the rattling of the train.
The domesticated animals
Which have emaciated at the handling of human,
Gone awry of hunting
And have started returning to home
Look up with astonishment
And go on with their grazing.
Train hurries up with great ruefulness
At its inability to derail.
Some faces are unconquerable
Some are ever unsurpassable.
Death and dissimilarity are inseparable rails.
I cannot tell my daughter
The whole of the talking of seas
Frozen within the sea and
What the sea - train tells through its rattling, in the darkness.

*
My daughter says
Seeing the engine that
Moves alone
Leaving the coaches at station
That the train goes to sleep.
We need to return to home too.
(Translated by Asadha, as a tribute to Shankara Rama Subramanian’s latest collection of poems from which the poem is taken. )

நண்பர்களுக்கு...

இக் கவிதை மொழிபெயர்ப்பை செம்மை செய்வதற்கான சாத்தியப்பாடுகள் இன்னும் இருப்பதாகவே எண்ணுகிறேன். பிரதிகளை ஒப்புநோக்கி, செம்மையாக்குவதற்கான வழிமுறைகளைக் கூற அன்புடன் அழைக்கிறேன்...